தமிழாக்கம் : புதியமாதவி வீடு திரும்பும் மனிதர்கள் தோல்வியுற்ற படைவீரர்கள்தங்கள் முகாம்களுக்குதிரும்புவது போலமனிதர்கள்தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். பெண்கள்வீடுகளை அடைகாக்கிறார்கள். கூர்மையான அறிவுடன் இருந்தகுழந்தைகள் கூடபின்னர்ஈசாப்* போல அடிமையாகிவிடுகிறார்கள்.அனுசரித்துப் போகும் பழக்கத்தின்நஞ்சுக்கொடியைச் சுமந்துசங்கிலிபோல சுழன்றுஸ்தம்பித்துவிடுகிறார்கள்.ஓவ்வொருவரும்அவரவருக்கான தனிப்பட்டதுயரங்களின் மடியில்சத்தமின்றித் தூங்கிப்போகிறார்கள். வீடுகள் பின் வீடுகள்நகரங்கள் …
மொழியாக்கம்
குறுங்கவிதை – மர்வான் மஃகூல்
தமிழாக்கம்: அனானி அரசியலற்றகவிதைஎழுதநான் பறவைகளைக்கவனிக்க வேண்டும்பறவைகளைக்கவனிக்கவேண்டுமென்றால்போர் விமானங்கள்அமைதியாக வேண்டும்.
பனிவிழும் வனங்களிடை நிதானித்தபோது – ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை
தமிழாக்கம்: பவளமணி பிரகாசம் யாருடைய வனங்களிவையென நானறிவேன்அவன் வீடிருப்பதோ கிராமத்தினிலேஅவன் வனங்கள் பனியால் நிரம்புவதைநான் நின்று ரசிப்பதை அவன் அறியமாட்டான் ஆண்டின் மிக இருண்ட மாலைப்பொழுதில்வனங்களுக்கும் உறைந்த ஏரிக்கும் இடையில்பண்ணைவீடொன்றும் அருகில் இல்லாமல் நின்றதேன்என்றெனது சின்னக்குதிரை வியக்குது சுகமாய் உலாவும் காற்றும் …
அன்றைய மொழிபெயர்ப்புகளும், இன்றைய மொழிபெயர்ப்புகளும்
பத்து வருடங்களுக்கு முன்பு, THT (Tamil Heritage Trust) குழுவினருடன் ஒரிசாவுக்கு ரயில் ஏறினேன். குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பு பயணம். அந்தக் குழுவில் வெகு சிலரைத் தவிர மற்றவர்களை எனக்கு அறிமுகம் கிடையாது. அதே பெட்டியில் ஒரு பெரியவரும், அவர் மனைவியும், …
சிறார் இலக்கியம் – மொழிபெயர்ப்பு: கடைசி ஆசை (ஆப்பிரிக்க நாட்டுப்புறக்கதை)
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஞா.கலையரசி முன்னொரு காலத்தில் ஓர் அரசர் இருந்தார். வெவ்வேறு பகுதிகளிலிருந்து புலவர்களும், இசைக் கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவரைப் பார்க்க வந்தார்கள். அவர்களுடைய கதைகளைக் கேட்பதும், பாடல்களை ரசிப்பதும் அவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. எல்லோரையும் விட மகமூத் என்பவரை …
மொழிபெயர்ப்புக்கவிதைகள் – சந்திரா மனோகரன்
ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையே!—– —————————————————————————ஆங்கிலம் : ஜார்ஜ் பார்க்கர்தமிழில் : சந்திரா மனோகரன் ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையேஓர் இதயம் மட்டுமே கேட்ட அழைப்பை போலசொற்களற்ற பாடல்கள் அந்த வெள்ளப்பரப்பில்எழுகின்றன!எல்லாவற்றிலும் நிரம்பியிருக்கும் ஆனந்தம்எழும்புகிறதுஒரு பட்சியின் சீழ்க்கையொலிபோல ஓ! …
துண்டுக் கயிறு – கீ டு மோப்பஸான்
தமிழில்: கார்குழலி அன்று சந்தை நாள் என்பதால் சுற்றியிருந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அவர்களின் மனைவியரும் கோடர்வீலை நோக்கி வந்துகொண்டிருந்தனர். நீண்ட வளைந்த கால்கள் எட்டிவைத்த ஒவ்வொரு அடிக்கும் உடல் முழுவதையும் முன்னால் நகர்த்தியபடி மெல்ல நடந்தனர் ஆண்கள். ஏரைத் தள்ளித்தள்ளி …
அரலுவா மரா (பூக்கும் மரம்) – கன்னட நாட்டுப்புறக் கதை
தமிழாக்கம்: ஐயப்பன் கிருஷ்ணன் அது ஒரு பழைய காலம். பஞ்சம் ஊரெல்லாம் தலைவிரித்தாடிய காலம் அது. அந்தக் காலகட்டத்தில், ஒரு ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றூரில் ஓர் ஏழைத் தாய் தன் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தாள். அன்றாட உணவிற்கே அவர்கள் …
ஜப்பானிய சிறுவர் கதைகள் 18 – மொழியாக்கம்
முன்னொரு காலத்தில் ஜப்பானில் இரண்டு தவளைகள் வசித்தன. ஒரு தவளை ஒசாகா நகரில் கடலோரமாக இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் வசித்தது. மற்றொரு தவளை கியோட்டோ நகரில் ஒரு நீரோடையில் வசித்தது. ஒரே இடத்தில் வசித்தது தவளைகளுக்கு சலிப்பாக இருந்தது. அதனால், …
இந்த நாட்களில் ஒன்று – கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ்
தமிழாக்கம்: செல்வராஜ் ஜெகதீசன் மழையில்லாத, சற்றே சூடான ஒரு திங்கட்கிழமை காலை, எப்போதும் சீக்கிரம் எழுந்து விடும் ஆரேலியோ எஸ்கோவர் (படித்துப் பட்டம் பெறாத பல் மருத்துவர்) காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் திறந்தார். பிளாஸ்டர் அச்சில் பொருத்தப்பட்டிருந்த சில …