“ஹாய் ஆராவமுதன் ஹியர்..”
“சொல்லுடா” என்றேன் அனந்த்திடம்.
“என்ன சொல்ல?”
“என்ன சடன்னா ஒரு பொண்ணு வந்து உன்னை லவ் பண்ணுதுன்னு அவ அப்பாவே சொல்றார்..”
“அதாவது சித்தப்பா.. “அனந்த் சொல்ல ஆரம்பித்தான்..
”என்னடா வாயடைச்சுப் போய்ட்ட?” – கேட்டார் ஸ்ரீனிவாச வரதன்.
”அப்பா இவங்க யாருன்னே எனக்குத் தெரியாது.”
”பார்த்தீங்களா வேணு, என் பிள்ளை பயந்த சுபாவம்..”
“டேய் நீ லவ் பண்றேன்னு சொல்லலை; அந்தப் பொண்ணு லவ் பண்ணி, அப்பாகிட்டச் சொல்லி இங்க வந்துருக்கு.”
”புரியலை.”
”நான் சொல்றேன்.. அனந்த்.. என் பெண் ஆர்யா, உங்க பேஸ்புக் ஃப்ரெண்ட்.. ஏ.வி அப்படின்னு இனிஷியல் மட்டும் போட்டுண்டு ஒரு குட்டிப் பாப்பா போட்டோ ப்ரொஃபைல்ல இருக்கும், நினைவுக்கு வருதா?”
”ம்.. அந்தக் குட்டிப் பாப்பாவா இவ.. வளந்துட்டாளா என்ன?”.. அனந்த் நினைத்தான்.
”யெஸ்.. அவளோட கவிதைகளுக்கு நீ லைக் போட்டிருக்க.”
”எந்த மாதிரி?”
”கடைசி நாள் சம்பளம்
மேஸ்திரி வாங்க
கையசைத்தது வீடு….
*
அம்மாவின் பழைய கடிதத்தில்
வேப்பம்பூ பச்சடி ரெஸிப்பி
இனித்தது..
நினைவுக்கு வருதா? நீங்க கூட லைக் போட்டு ‘நைஸ்’னு சொல்லியிருக்கேள். அண்ட் அவ ஃப்ரண்ட் ரெக்வஸ்ட்ட உடனே அக்செப்ட் பண்ணிண்டேள்.”
”அதற்காக லவ்வா?” – மனதுள் நினைத்தான்.
”என் பொண்ணு கொஞ்சம் உங்க டைம்லைன்ல பார்த்திருக்கா.. உங்க குவாலிஃபிகேஷன், கம்பெனி எல்லாம்தான்.. என்கிட்டச் சொன்னா.. ‘ஹி வில் பி சூட்டபிள் டூ மீ, டாட்’னா..
கம்பெனி பார்த்தா இதுவா, ‘அட நம்ம சாரி கம்பெனியாச்சே’ன்னு சாரிகிட்டப் பேசினேன்.. அவன் உங்களைப் பத்தி உயர்வாச் சொன்னான்.. தென், நைஸா ஸ்ரீனிவாசன்கிட்ட ஜாதகம் வாங்கித்தான்னு சொன்னேன்.. தந்தான்.. நல்ல பொருத்தமாம்; எட்டோ ஒன்பதோ.. ஃபர்ஸ்ட் கிளாஸ்னு ஜோசியர் சொல்லிட்டார்.. அவர் சொன்னதுலருந்து இவா கால் நிக்கலை…
இவாளைக் கோவில்ல சாரியோட பார்த்தேன் ஃபார் ஏ சேஞ்ச்.. பையன் பார்க்க வந்திருக்கோம்.. நீங்க என்ன சொல்லறேள்?”
*
”அதுசரிடா” – சிரித்தேன் நான்.
”முகம் பார்த்து மட்டும் இல்லடா, கம்பெனி பார்த்து.. அப்பாவோட ஊரு.. ஃப்ரெண்ட் சாரிகிட்ட சேலரிலாம் கேட்டிருப்பார்.. ம் குட்.”
”என்ன குட்?”
”இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இந்த ஆர்யாவுக்கு வந்துருக்கறது, ஒரு தடவை ஆயுஷி சொன்னாளே, ஒன்கிட்ட இன்ஃபாச்சுவேஷன்.. அதான்.. பையன் நன்னா இருக்கான், நான் எழுதினதைப் பாராட்டற என் ரசிகன்.. பிளஸ் விசாரிச்சதுல நல்ல பையன்.. நல்ல சேலரி.. சோ ஒய் நாட்?
இதான் இந்தக் கால லவ்.. இப்போ நீ நோ சொல்லிட்டேன்னாக்க, அவ தாடி வளத்துண்டு.. ஸாரி.. கண்ணுல சோகத்தோட ஜன்னல் கம்பியைப் பிடிச்சுண்டே வானத்தைப் பார்த்திருப்பாளா?.. நெவர்..
கண்ணில் தெரியற ஸ்கை கையில என்னைக்கும் வராது… வானத்துல திரிஞ்சுண்டிருக்கிற மேகம் தொட்டுத் தழுவுமோ? எஸ், சம்டைம்ஸ்.. கொடைக்கானல்லாம் போனா மஞ்சு முட்டும்.. இல்லை மஞ்சுளா இல்லை மஞ்சு.. மேகம்.. ஏன்னா ஒஸ்ஸரமான இடம்..
ச்சும்மா கல் எறிவோம், மாங்காய் வந்தா ஓகே.. கல் திரும்பி வந்தா கல்தானேங்கிற மெண்ட்டாலிட்டி கொண்ட இந்தக் காலப் பொண்ணு.. ம், நான் வந்து பேசறேன்..”
”சித்தப்பா, என்னாச்சு? பிரேக்பாஸ்ட் கொடுத்தாளா இல்லையா ஆயுஷி?”
மறுபடி சிரித்தேன்.. ”அட, நல்ல தூக்கம் ராத்திரி.. காலைல சாய் வந்துடுத்து.. பிரேக்பாஸ்ட்டும் ஆயாச்சு; புட்டுக் கடலை.. சூப்பர்..
சரி நீ என்ன பண்ற, ரெண்டு விசிட் விசா உன் பிஆர்ஓகிட்டச் சொல்லி ஏற்பாடு பண்ணு, இன் டூ டேஸ்..”
”எதுக்கு? யாருக்கு?”
”ஒண்ணு எனக்கு.. இன்னொண்ணு பாலன் கே மேனனுக்கு.”
”பாலன் கே நாயரா?”
”அனந்த் பையா.. அது மலையாள ஆக்டர்.. இது ஆயுஷி அப்பா…”
”எப்படிச் சித்தப்பா…”
”அதாவது நேத்து ராத்திரி நீ ஃபோனை ஆயுஷி கிட்ட வச்சுட்டயோன்னோ, அப்போ…”
”ஆயுஷி…”
”அப்பா..” அனந்துடன் பேசிய போனை அணைத்துவிட்டு நிமிர்ந்தார் பாலன்.. பாலச்சந்திரன்..
”சொல்லுங்கப்பா”.
”அந்த ரூம்ல இருக்கிறவர்?”
”வாங்க, என் ஆஃபீஸ் கலீக்கோட சித்தப்பா.. இந்தப் பக்கம் வந்திருக்கார்.. என்னையும் பார்க்கலாம்னு வந்திருக்கார்.. அத்தை பத்தி அவருக்குத் தெரியாது.”
”அவர் எதுக்கு உன்னைப் பார்க்க வரணும்?.. எங்க அவரைக் காணோம்?”
அதற்குள் குளித்துவிட்டு ஆராவமுதன் வர…
”ஹலோ சார்.. ஐ ஆம் ஆராவமுதன்..”
”ஹாய்.. நான் பாலன்..”
”ஆக்சுவலா என் அண்ணன் பையன் அனந்த், ஆயுஷியோட கலீக்.. ஹி செட், அவங்களுக்கு ஹெல்த் சரியில்லைன்னு பேசிண்டிருந்தான்… எனக்கும் இந்தப் பக்கம் கொச்சின் வரை வேலை இருந்தது.. என் ஊர் கருந்தாட்டங்குடி..”
”ஓ கொச்சின்ல எந்த இடம்?”
ஆரு திகைத்தார்..
”இல்லை.. மிஸ்டர் ஆராவமுதன்.. சொல்லுங்க.. வந்தீங்களாம், திகைச்சுப் போய் உட்கார்ந்திருந்தீங்களாம்.. ஆயுஷியப் பார்த்தவுடனே சந்தோஷப்பட்டுப் பேசிட்டிருந்தீங்களாம்.. அனந்த், அனந்துன்னு பேர் அடிபட்டிருக்கு.. கீழ ஆயா சொன்னா… யெஸ்.. அனந்த் தானே உங்க அண்ணன் பையன்..”
மனுஷர் கெட்டி.. கரெக்டாக நூல் பிடித்து விஷயத்திற்கு வருகிறார்.
”அப்பா, அவர் முதல்ல சாப்பிடட்டும்; பின் நானே சொல்றேன்..”
”ம் சாரிங்க, வாங்க சாப்பிடலாம்.”
அழகான சாப்பாடெல்லாம் இல்லை.. ஆப்பம் இஷ்டு.. கிச்சன் ரொம்ப க்ளீன்..
முடித்ததும் ஆராவமுதனின் அறை.. ஆயுஷி, பாலன்..
”சொல்லுங்க” என்றார் பாலன்.
”சொன்னேண்டா.. அவர் ஒண்ணும் பேசலை.. மௌனமா இருந்தார்.”
”அப்புறம் என்னாச்சு சித்தப்பா?”
”உங்க அண்ணன் என்ன சொல்வார்னார்..”
”ஹச்சோ, சம்மதிச்சுட்டாரா?”
”பின்ன என்ன? கல்யாணம் ஒரு மாசம் போகட்டும், நானும் வந்து அனந்தைப் பார்க்கறேன் அண்ட் உங்க அண்ணனையும்னார்.. கொஞ்சம் ஆயுஷியையும் படுத்திட்டேன்.. ‘ஆயுஷி, நீ சொல்லியிருக்கலாமில்லை’ன்னு ஆயுஷியைக் கேட்டார்.
”இல்லைப்பா, எனக்கு எப்படிச் சொல்றதுன்னு தெரியலை” அப்படின்னு ஆயுஷி சொல்ல,
‘இட்ஸ் ஆல்ரைட்’னார்.. அப்புறம்தான் இந்த டிசிஷன்.. அதான் உனக்குப் பண்ணினேன்.. நீ என்னடான்னா இப்படிச் சொல்ற, என்ன சொன்ன வேணுகிட்ட?”
”யோசிக்க டைம் கொடுங்கன்னுட்டேன்..”
”அப்படியே மெயின்டெய்ன் பண்ணு.. ஓகே, வரோம் பை நெக்ஸ்ட் வீக்..”
சொன்னார்போல வந்து, அனந்த்தின் அப்பா ஸ்ரீனிவாச வரதனைக் கன்வின்ஸ் செய்துவிட்டார் ஆராவமுதன்..
பாலன் கே மேனனின் முரட்டு மீசையும் சாந்தமான முகமும் அனந்த்தின் அம்மாவிற்குப் பிடித்துவிட்டது..
”கல்யாணம் எங்க ஸ்டைல் தான், ஓகேயா?” – இது ஸ்ரீனிவாச வரதன்.
”ஓகே” என்றார் பாலன் கே மேனன்.
”கிளி கொஞ்சறது பொண்ணு..” என்றாள் அம்மா ஆயுஷியைப் பார்த்து.. ஆயுஷி கொஞ்சம் நெகிழ்ந்தாள்..
”என்ன சீனு சொல்ற?”
”அந்த வேணுக்குத்தான் என்ன சொல்றதுன்னு பார்க்கறேன்..”
”நான் பேசிக்கறேன் ஆர்யா கிட்ட” என்றார் ஆராவமுதன்..
”சித்தப்பா என்ன சொன்னார், அனந்த்..?”
ஆயுஷியின் முகம் செல்லில் தெரிய, அனந்த் சிரித்தான்.
”ஏய், நீ ரொம்ப அழகா இருக்க.”
”இதை மாற்ற மாட்டாயா என் குட்டிப் பூச்சையே..”
”சரி, நீ ஒரு அழகி..”
”சொல்லுப்பா.. ”
”சித்தப்பா போயிட்டு வந்தாரா.. ஆர்யா டிட்ண்ட் டேக் இட் லைட்லியாம்”
”என்னது?”
”ஏய், தூக்கிவாரிப்போடாதே.. சித்தப்பா சொன்னது தப்புபோல.”
”என்னது?”
”ரியலாவே லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கா என்னை.. ஒன் சைடட் லவ்.. கண்ணுல எல்லாம் தண்ணி, குளம்…”
”பின்ன?”
”உனக்குத்தான் சித்தப்பா தெரியுமே, பேசிப் பேசியே கொஞ்சம் கன்வின்ஸ் பண்ணியிருக்கார்.. உனக்கு நல்ல பையனாப் பார்க்கறேன்னுருக்கார்..”
”அப்புறம்?”
”வலி இருக்கும், வில் ட்ரைன்னு சொல்லியிருக்கு ஆயுஷி.. நானா இவளை லவ் பண்ணச் சொன்னேன்?”
”அதானே!”
”ம் ஆயுஷி.. நீ எப்படி இருக்க தெரியுமா?”
”அழகா இருக்கேனா? இப்படி எத்தனை தடவை திரும்பத் திரும்பச் சொல்வடா.”
”இல்லை.. நீ.. மலரம்பன் எழுதிய மலையாளக் கவிதையாக்கும்.. 2017 வெர்ஷன்.. மாலையில் குளிர்காயும் மாயா சிற்பம் நீ.”
”ஹச்சோ” சிரித்தாள்.. ”இவ்ளோ ஓல்ட் சாங்கா இத பாடப்போற? வெக்கமா இருக்கு.”
”ம்ஹூம், அதை நம்ம ஹனிமூன் சூட்ல பாடறேன்.. இப்போ… கிலுக்காதே கிலுக்குன்ன கிலுக்கம்பட்டி, உன் கிண்கிணி அரமணி எவ்விடே?”
”ஒளிச்சுவச்சு ஞான், ஒளிச்சுவச்சு..”
”ஒரு ராவில் அனுபூதித் திரியூடே வெளிச்சத்தில் ஒருமிச்சுக் கவரும் உன் நிறமாலைகள்.. காலங்கார்த்தால மட்டுமா நீ அழகு.. எப்போதுமே நீ வண்ணம் தான்!”
”போடா.. நிறைஞ்சு போயி.. ஞான்..” – என்றவள் திடீரென நினைத்துக்கொண்டு… ”ஆமா, இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும்.. சித்தப்பா கொடுத்தாரா?”
”அவர் தேன்கிண்ணம், பூங்கிண்ணம் கொடுத்தார்.. அதுக்கு ஆத்தங்கரைலாம் போகணும், டைம் இல்லை.. இதுதான் எனக்குப் பிடிச்சதாக்கும்.. பாடலாமா?”
”பாடலாம்.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் நீ ஒண்ணு முக்கியமா செய்யணும்…”
”என்னது?”
”சித்தப்பாவை டைவர்ஸ் செஞ்சுடு!”… – என்றாள் ஆயுஷி..
(முற்றும்)