ஒரு பொன்வண்டைப்போல் மின்னும்அந்தச் சிறு கார்பொம்மையைகண்கொட்டாமல் பார்க்கிறார் தாத்தாபால்யத்தின் விளையாட்டுத்தோழனான பொன்வண்டொன்றுநிகழ்காலத்தின் மேசைமேலமர்ந்தாற்போல்முன்னும்பின்னும் அசைந்தசைந்து ரீங்கரிக்கும்அப்பொம்மையைதனது கனவு வாகனத்தைகையிலெடுத்து ரசித்த பேத்தியின் முகத்தில்தன்னையே கண்டவர்திருப்தியாய் பெருமையுடன் தலையசைக்கிறார்நல்லாச்சியிடமும் பேத்தியிடமும் உண்ணும்போதும் உறங்கும்போதும்இன்னோரன்ன வேலைகளின்போதும்அதைக் கை விடாமல்உள்ளங்கையில் பொத்திக்காக்கும் பேத்திக்குஅதன் வகையறியும் ஆவல்உள்ளத்திலிருந்து …
சாந்தி மாரியப்பன்
வெகு அமைதியாய் இருக்கிறது வீடுகிலேசமடைகிறாள் நல்லாச்சிஏதோ சரியில்லையெனஉள்மனசு எச்சரிக்கிறது அவளைநிசப்தமாய் இருக்கும் குழந்தைகள்விஷமங்களின் ஊற்றுக்கண் என்றறிவாள் அவள்அடுக்களையின்மூலைமுடுக்கெல்லாம் சோதிக்கிறாள்சேதமில்லையென்பதறிந்து நிம்மதியாகிறாள்அஞ்சறைப்பெட்டி கலவரபூமியாகியிருந்ததைஇன்னும் மறக்கவில்லை அவள் அடுத்த கட்டமாய்தோட்டத்திற்குப் பாய்கிறாள்விவசாயி விளையாட்டில்கத்தரி,தக்காளிச் செடிகளின் கதியைஇன்னும்புலம்பித்தீரவில்லை அவள்திக்திக்கென்ற நெஞ்சோடுதிண்ணையிலமர்ந்தவளை எழுப்பிஉள்ளே விரட்டுகிறதுபூஜைமணிச்சத்தம் கண்டகாட்சியில் கதிகலங்குகிறாள்பாவம்போல் …
முதற்சோறூட்டும் சடங்கிற்காய்குழுமியிருக்கின்றனர் குடும்பத்தார் அனைவரும்பிள்ளைக்குத் தான்தான் ஊட்டுவேனெனஆளாளுக்குப் பதிகிறார்கள் நல்லாச்சியிடம்தர்மசங்கடத்துடன் தலையசைக்கிறாள் அவளும்பாரபட்சமின்றி பாலமுதும் தேனமுதும் பாயசமும்வெள்ளிக்கிண்ணங்களில் வீற்றிருக்கமாலைகளும் குறுவேட்டியுமணிந்துதண்டை சலசலக்கக் காலுதைக்கும் பாலகனுடன்வழிபாடுகள் முடியக் காத்திருக்கின்றனர்கூப்பிய கரங்களுக்குள்பொதிந்த வேண்டுதல்களோடும்முதல் மரியாதைக்கான எதிர்பார்ப்புகளோடும் வீறிடத்தொடங்குகிறான் குழந்தைஎதற்கும் கட்டுப்படா அழுகைக்குஆளாளுக்காய்க் காரணங்களைக் கண்டவர்கள்மறக்காமல் …
மலர்களின் இதழ்களில்சுழலும் ஓவியமாய்ஒன்றையொன்று தொடர்கின்றனஇரு நீலப்பட்டாம்பூச்சிகள்நாட்டியத்தின் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டுககன மேடையில்பூக்களை உடலெனக் கொண்டுதன்னை மறந்து சுழன்று நடனமிடும்பட்டாம்பூச்சிகள்சிறகுகளின் நீலத்தைப் பிழிந்துகாற்றில் ரகசியக் குறியீடுகளால்நடனமொழிகளை வரைகின்றன வளைவுகளை வரையும்போது மட்டும்அவை அதியுற்சாகங்கொள்கின்றனஅவற்றில்தளைகளை உடைக்கும் சுதந்திரமிருப்பதைஅவைஎப்போதோ கண்டுகொண்டுவிட்டிருக்கின்றன மொழிகள் உறைந்துபோன ஒரு கணத்தில்ஒரு வண்ணத்துப்பூச்சிஎன் …
பன்னாட்களாய்ப் பராமரிப்பின்றிகட்டாந்தரையாய்க்கிடக்கிறது வீட்டுத்தோட்டம்ஆடி, தையென எல்லாப்பட்டங்களையும்பறக்க விட்டுசாரலையும் தூறலையும் கண்டுகொள்ளாதுவயல்களும் தோப்புகளுமே சரணமென்றிருந்தவர்களிடம்கடுப்புற்றுஉலோபியின் நெஞ்சென இறுகிக்கிடக்கிறது நிலம்யோசனையில் ஆழ்ந்திருக்கிறாள் நல்லாச்சிசெலவிடாத தாத்தாவை வழிக்குக்கொண்டுவரும்வகையறியாமல். கண்ணீர் ததும்ப ஓடிவருகிறாள் பேத்திகனத்த கட்டிக்கொலுசுநவமணி பதித்த தங்கக்கொலுசுதோட்டத்து எலிப்பொந்தில் விழுந்துவிட்டதாம்அலறியடித்து விரைகிறார் தாத்தாமடமடவென உத்தரவுகள் பறக்கபரபரவென …
சொற்கள் உதிரும் வெளியில்தன் முகமூடியைக் கழற்றிய காலம்கடந்துபோன வரிசையில்ஒரு கதை அடைகாத்து விழித்திருக்கிறது பார்வை தொட்ட இடமெல்லாம்படிமங்கள் பெருககற்பனை தொட்ட பிம்பங்கள்நிழல்களிலிருந்து உயிர்த்தெழுந்துநிஜமும் புனைவுமாய்ஒன்றையொன்று விழுங்கிக்கொள்ளஅக்கதை தன் சொந்தப்பாதையைவரைந்து கொள்கிறது ஒரு சொல்லெடுத்துப் பதித்துஇன்னொரு சொல்லை அடுக்கிஅக்கதை நெய்யும் பெருங்கதையில்மொய்த்து முரலுகின்றனஎத்தனையோ …
சூரியன் தனது எட்டுமணி மென்மையைக் கைவிட்டு, பதினோரு மணி வெம்மைக்குள் நுழையத்தொடங்கியிருந்த ‘சுள்’ பொழுது. “ச்சாய்.. ச்சாய்.. இஞ்சி ச்சாய்” என எங்கிருந்தோ ஒரு குயில் கூவிற்று. கூவிய குயில்குரல் மெதுவாக மிதந்து வர வர சிவராமனுக்கு தேநீர் பசியெடுத்தது. பல …
ஈரநிலவின் நறுமணம் கசியும் வெளியில்இந்த இரவின் கிளைகளில்வெண்முத்துப்பரல்களாய்க் குலுங்கும்ஓராயிரம் நிலாமொட்டுகளின் நெற்றியில்தன் மென்விரல்களால்காற்றைத்தொட்டுமுத்தமாய்ப் பதிக்கிறதுஒளித்துகள்களால் நெய்யப்பட்ட கவிதையைஆடையாய் உடுத்த இரவு ஆசைகளின் அடர்ந்த மெளனத்தில்தூங்காதிருக்கும் கவிதைகள்இரவின் காதில் ரகசியமாய் மொழிபவற்றைதன் யாழில் சேமித்துக்கொள்கிறான்யாரோ ஒரு பாணன் அப்பாடல்களின் வெளிச்சம்பட்டுசுடரின் முத்துகளெனநீ தந்த …
முற்றத்தில் நின்றிருந்த அந்த ஒற்றை வேப்பமரம், அதிகாலைப் பனியில் நனைந்து சொட்டிக் கொண்டிருந்தது. மாரிமுத்துவின் கையில் இருந்த பழைய இரும்புப் பெட்டி அப்படியொன்றும் கனக்கவில்லை. திணிக்கப்பட்ட ஒன்றிரண்டு துணிமணிகள் என்ன கனத்து விடப்போகின்றன? வீட்டின் கதவை இழுத்துப் பூட்டியபோது எண்ணெய் இடப்படாமல் …
அரிசிஉளுந்து அளந்தெடுத்துஅண்டாநிறைய அரைத்துவைத்துவெடிக்காத உப்புச்சீடையும் கருகாத வெல்லச்சீடையும்பிரிபிரியாய்க் கைமுறுக்கும் பக்குவமாய் அதிரசமும்பல்லில்லாத கிச்சாவுக்கு பதமான மைசூர்பாவுமாய்அரங்குவீட்டில் அடுக்குகிறாள் நல்லாச்சி‘எச்சியாக்கிராதியோ பிள்ளேளா..கண்ணனுக்குப் படைச்சுட்டு ஒங்களுக்குத்தாம்’ என்றபடிதொறவாலைப் பத்திரப்படுத்துகிறாள் இடுப்பில்அரங்குவீட்டில் ஒரு கண்ணும்பேரம்பேத்திகள் மேல் இன்னொரு கண்ணுமாக பச்சரிசி ஊறவைத்து பக்குவமாய் தானரைத்துமங்களமாய் மாக்கோலங்களைஇழைத்து …