Home கவிதைதின்று செரித்தாலும் தீது

ஆசை மிகுதியால் அதிகம் தின்னாலே
குறையும் வாழ்நாள் என்பது உறுதியாமே!
நாவின் ருசிக்கு அடிமை ஆனாலே
உடல் நலம் கெட்டுச் சீரழிந்திடுமே!

கீரையும் காயும் கனிகளும் உண்பதே
காயம் காக்கும் முறையாகும்!
அகாலத்தில் கண்டதையும் புசித்து வந்தாலே
தீராப் பிணிகள் வருவது நிச்சயமாகும்!

உண்டது செரிக்க உதவிடவென்று
நடையும் உடற்பயிற்சியும் நன்று!
நஞ்சான துரித உணவு நிதம்
தின்று செரித்தாலும் தீது

Author

  • கவிஞர் நளினி சுந்தரராஜன் வட அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதும் இவர், அமெரிக்காவில் தமிழ்ச்சங்கப்பேரவை, கவியரங்கங்கள் மற்றும் உலகத்திருக்குறள் மாநாட்டில் கவிதைகள் வாசித்திருக்கிறார். "Face in Face" இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். "திக்குகளின் புதல்வியர், உறைபனி உதிர்த்த இறகு, வலசை சென்ற வண்ண மயில்கள்" ஆகிய தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

You may also like

Leave a Comment