பூப்பின் மகிழ்வில் மொட்டவிழ்ந்திருந்த
புலர்பொழுது
பனியின் முகிழ்வில் சாலையும் ஏனையவையும்
வியர்வையின் நனைவில்
நடைப்பயிற்சியில் அவர்
சிறகு துடைத்து வானேறிய பறவை
துண்டு கேட்ட மரங்கள் தலையில் ஈரம் பூத்து
இலக்கில்லாப் பயணத்தில்
என்னை அழைத்துச் சென்ற இருசக்கர வாகனம்
முகம் காட்டாது ஒளிந்திருந்த சூரியன்
வெண்வானத்துடன் சிரித்துப் பேசி
பாலத்தின் கீழ் சென்ற
புகைவண்டியின் ஒலிப்பான் சப்தித்து
தூரத்து வீட்டின் காபி வாசனை
குளிரணிந்திருந்த நாசித்துளை தொட்டு
சரேலெனத் திரும்பிய சாலை
அவசரப் பயணங்களின் மனிதர்களையும்
வாகனங்களையும் அறிமுகித்து
தூரமாய்க் கூவிய கோழி தன் தாமதமுணர்ந்து
இன்னும் துயிலெழா நாயகனும் நாயகியும்
சாலையோர சினிமா தியேட்டருக்குள்
மேலெழுந்த புகையில்
சாலையோர இட்லிக்கடை ஆயாவின் முகம்
நாவரும்புகள் தொட்ட தேநீர்ச் சுவையுடன் நான்.
4
previous post