கல்வி மறுக்கப்பட்டதா? கர்ணனின் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் மிகப்பெரிய அநீதியாகப் பலரும் கருதுவது அவனுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பதைத்தான். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்த சூதனின் மகன் என்பதால் துரோணாச்சாரியார் அவனுக்கு வில்வித்தை கற்றுத்தர மறுத்துவிட்டார் என்றும், அந்த அவமானத்தால்தான் அவன் வேறு …
இதழ் 14
காலத்தின் கால்களில் நசுங்கவேண்டுமென்றவிதிமுறைகளின் சாம்பல்நிறப் புத்தகத்தைவாசித்தறியா பூக்கள்ஒவ்வொன்றாய் கண்மலர்த்துகின்றன காற்றின் கத்தரிக்கோலால்உலர்ந்த சருகுகளாய் நறுக்கப்பட்டுமண்ணின் ஆழத்தில் புதையப்போகும்மரணத்தின் கணக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டுதங்கள் பூங்கதவுகளைத் திறக்கின்றன யாரோ வரைந்த ஓவியத்திலிருந்துதிடீரென வெளியேறும் வண்ணத்துப் பூச்சிகளாய்உலகைப் பார்க்கும்அவற்றின் பார்வையில்வானம் ஒரு நீலநிற நதியாகவும்,பூமி அதில் …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். அந்நிலவும் அஞ்சும் அழகு என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கன்னல் மொழியாளின் கார்வண்ணக் …
சுள்ளி சேகரிக்கும் பறவை கூட்டைக் கலைக்கும் காற்று மற்றுமொரு சுள்ளி.
சமயோசிதம் (Presence of mind) எனப்படும் மதிக்கூர்மை தக்க நேரத்தில் வெளிப்படுவது கவிஞர்/புலவர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று. அவர்களின் அம்பறாத்தூணியிலிருந்து சொற்கள் அம்புகளைப் போன்று எடுக்க எடுக்க வந்துகொண்டே இருக்கும். எந்தச் சூழலையும் வெல்லத் தெரிந்த சொலல்வல்லோர் ஆவாரவர். சான்றாக, எட்டயபுரம் அரசவையில் …
ஒரு கவிஞருக்கு, ஒரு கஜல், ஒரு புகழ்பெற்ற கஜல் பாடகரால் பாடப்பட்டால் அது நிலைத்த புகழுக்குப் போதுமானதாக இருக்கிறது. அந்த ஒற்றை கஜல் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்திய பாகிஸ்தானிய இசைத்தட்டு உலகில் கஜல்கள் புகழடையத் தொடங்கிய எழுபதுகளின் …
முகநூலில் வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை வழங்கியிருந்தோம். தின்று செரித்தாலும் தீது என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: அன்பு விடுத்து …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா மறந்துபோக வேண்டும்தீங்கினை நினைவுறுத்திய விடியலைஅந்த விடியலை உசுப்பிவிட்ட இதயத்தைஅனைத்தையும் மறந்துபோக வேண்டும் வானக் கிண்ணத்திலிருந்த வெளிச்சத்தையெல்லாம் விழுங்கிவிட்டுவிக்கலோடு உன்முன்னால் வந்த இந்த இரவுக்குகொஞ்சம் போலக் கண்ணீர் புகட்டினாலும் சரிவிடிவதற்குள்ளே எல்லாவற்றையும் மறந்துபோக வேண்டும் காலத்திற்குத் தாகமெடுக்கும்போதெல்லாம்நெஞ்சின் …
வணக்கம், ஆரு ஹியர்.. அது சரி, திடீர்னு ஒரு மலையாளப் பெண் எதுக்கு குஜராத்தி டான்ஸுக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும் அனந்தை எனக் கொஸ்டின் வரலாம் உங்களுக்கு. மஸ்கட் இருக்கே, இந்த கருந்தட்டாங்குடி அண்ட் அமெரிக்க கிராமம் இரண்டும் கலந்த கலவை.. மஸ்கட் …
பழைய குளம்;குதித்த தவளைநீரின் ஓசை! பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பானியக் கவிஞர் மாட்சுவோ பாஷோ எழுதிய இந்த மூன்று வரிகள்தான், உலக இலக்கிய வரலாற்றில் ஹைக்கூவின் முகவரியாக இன்றும் நிலைத்து நிற்கிறது. ஒரு சாதாரண தவளை நீருக்குள் குதிக்கும் நிகழ்வை, பிரபஞ்சத்தின் மகத்தான …