இருசியமுக மலை உச்சியில் இருந்த குகைக்குள் இருந்த சுக்ரீவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உளவறியச் சென்ற அனுமன் இன்னும் வரவில்லை. ஏற்கனவே ஒற்றர்கள் சொல்லியிருந்த செய்தி அவன் மனதை அரித்துக்கொண்டிருந்தது. இரு மானிடர்கள் பெரும் வில்லுடன் இருசியமுக மலையைத் தேடி வந்துகொண்டிருந்த செய்திதான் …
ஐயப்பன் கிருஷ்ணன்
வெள்ளிக்கிழமை காலை. அர்ஜுன் சரியாகத் தூங்கவில்லை. கண்கள் சிவந்திருந்தன. முகச்சவரம் செய்யும்போதே கை லேசாக நடுங்கியது. நேற்றிரவு சுசிக்குத் தெரியாமல் அந்த எண்ணிற்குப் பதில் அளிக்க முயன்றான். ஏதும் போகவில்லை. மீனாவின் பழைய எண்ணிற்கே செய்தி அனுப்பினான்: “பிரிகேட் ரோட், டீ …
தேநீர்க் கோப்பையிலிருந்து எழுந்த சூடான ஆவி அர்ஜுனின் முகத்தில் பட்டது. சுசி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் அவனை ஆராய்ந்துகொண்டிருந்தன. அதை விலக்கத் தன் தலையைத் திருப்பிய அர்ஜுனின் பார்வை, தற்செயலாக மேசையின் மீதிருந்த கணிப்பொறியின் திறந்த திரையை நோக்கி நகர்ந்தது. …
பம்பா நதிக்கரையின் அந்தச் செந்நிறப் பாறை இடுக்குகளில் அந்திப் பொழுது ஒரு மர்மமான நிழலைப் படரவிட்டிருந்தது. நதி நீரின் சலசலப்பு ஏதோ ஒரு எச்சரிக்கையைச் சொல்வது போலத் துரிதப்பட்டது. தூரத்தில் இருந்து அந்த வேடுவ இளைஞனை உற்று நோக்கிய இலக்குவனின் கண்களில் …
மதங்கமுனியின் ஆசிரமம் சற்றே காலத்தில் உறைந்து நின்றது போல இருந்தது. சபரியின் மரணம் குறித்த செய்தி சுற்றி இருந்தவர்களுக்குத் தெரிந்து அங்கே குழும ஆரம்பித்திருந்தார்கள். இராமன் கலங்கி நின்றான். சற்று முன்பு வரை தாய் அன்பின் ஊற்றாக நின்ற ஒரு மூதாட்டி, …
அர்ஜுனுக்கு வயது நாற்பத்திரண்டு. போன மாதம்தான் முடிந்தது. பெரிய கொண்டாட்டமெல்லாம் இல்லை. அவனது நாட்காட்டியில் அது வெறும் ஒரு வேலைக்குறிப்பு மட்டும்தான். ‘வழக்கமான சுயபரிசோதனை, முப்பது நிமிடங்கள்’ என்றிருக்கும். பின் அதை முடிந்தது என்று குறியிட்டுவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்துவிடுவான். அவன் …
மதங்க வனத்தின் அந்தப் புண்ணிய பூமியில் அன்று காற்று கூட ஒருவிதப் பரவசத்துடன் வீசிக்கொண்டிருந்தது. சபரிக்கு அன்று காலையிலிருந்தே இருப்புக் கொள்ளவில்லை. காற்று தன் காதில் வந்து தேவ ரகசியம் ஓதியதைப் போல எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஒருவிதப் பதற்றம்; ஆனால் …
அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு
தற்காலக் கர்நாடகத்தின் குத்ரேமுக் மலைத்தொடரின் ஒரு பகுதியில், மேகங்கள் முத்தமிடும் சிகரங்களுக்கு இடையே ஒரு இருண்ட குகை இன்றும் மர்மங்கள் சூடி நிற்கிறது. அது ‘அயோமுகி குகை’. அங்கே ஆண்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பதற்கும், ஒரு பெண் பூசாரி மட்டுமே அந்த …
கிரௌஞ்ச வனத்தின் அந்தப் பகுதி ஒரு அமானுஷ்யமான நிசப்தத்தில் உறைந்திருந்தது. அந்திப் பொழுது ஒரு குருதி படிந்த வாளைப் போலச் செந்நிறமாகத் தென்பட, அடர்ந்த மரங்களின் நிழல் கரிய நாகங்களைப் போல நிலத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது. அங்கே ஒரு பாறை இடுக்கின் …
விந்திய மலைத்தொடரின் சிகரங்களில் விடியற்காலையின் முதல் பொன்னிற ஒளி விழுந்தபோது, துங்கபத்திரை நதி தன் நீலத் தோள்களில் அந்த ஒளியை ஏந்திக்கொண்டு, சலசலத்துக்கொண்டு ஆக்ரோஷமாகப் பாறைகளுக்கிடையே நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்தச் சலசலப்புகள் கிஷ்கிந்தைக்கு வர இருக்கும் துயரங்களுக்கான கிசுகிசுப்பைப் போன்று இருந்தன. …