1. சும்மா கிறுக்குகிறேன் என்பாள்கிறுக்கி கிறுக்கிக் கிழித்தாள்அந்தப் பக்கம் களர்நிலம் போன்றது என்பாள்படுபயங்கரமான விளைச்சல் உள்ள களர்நிலம்எல்லா இரகசியமும் ஒளிந்த பக்கம்யாவருக்கும் கிறுக்கல்களின் குவியல்தனக்கே அது உரித்தான பக்கங்களாய்ஒவ்வொரு நோட்டுகளும்தாங்கும் அப்பக்கங்களின் சுமை அதிகம்அவை தனித்தே இருப்பவைஅடையாளங்களோடு… *********************************************************2.பழுதாகும் பொழுதுகளில் எல்லாம் …
கவிதை
விரையும் காலத்தின் ஓட்டத்தில்விரும்பும் தேவைகளும் அதிகரிக்ககற்கும் கல்வியின் நோக்கத்தால்கருத்தினில் கூடிடும் மாற்றங்கள். கல்வியின் முறைகள் மாறிடவேகற்பிக்கும் திறன்களில்கலந்திடும் புதுமைகள். புதுமைகளின் வரவால்கூடிடும் கவனத்தில்படிப்பின் புரிதல் உயர்ந்திடுமே. புரிதல் காட்டும் பாதையிலேசெயலின் தாக்கம் நீண்டிடுமே.செய்முறை காணும் களத்தினிலேபடைப்பவர் வாழ்வியல் வளர்ந்திடுமே. படைப்பும் பண்பும் …
அந்தக் கடற்கரைசாலையின் மதிய வெயில்இதமாய்க் குளிர்ந்ததுஅலைபேசி அழைப்புகளைநிராகரித்த அவனுடையஅவசர வேலையை சபிக்கிறேன்ஆயினும்இத்தனை கருணையாய்இத்தனைத் தனிமையாய்ஒரு சுதந்திர தினத்தைஇன்று அவன் எனக்காக பரிசளித்துள்ளான்ஆனால்ஒருவர் பரிசளிப்பதுதான் சுதந்திரமெனில்என்னிடம் இருப்பது என்ன?இப்படி எல்லாம் எண்ணங்கள்அலைமோதிக் கொண்டிருக்கையில்அந்தக் கடல் காகங்கள்ஒவ்வொரு முறையும்நீரில் மூழ்கிமீனைக் கொத்திச் செல்கின்றன.
வகுப்பறை கீதங்களில்வரவேற்றிடும்வாழ்த்து மழை. பிஞ்சுகளின் கரங்களில்தேகத்தில் பாய்கிறதுபனித்துளிகளின் குளிர்ச்சி. கொஞ்சிடும் பேச்சுகளில்ராகங்கள் கூட்டிடும்இசைச்சுரங்களின் சேர்க்கை. எண்ணங்கள் விரித்திடும்சின்னச் சின்னக் கனவுகளில்வகுப்பறையெங்கும்வண்ணத்துப்பூச்சிகள். குடும்பத்தை வினவுகையில்விழியும் மொழியும்விளிம்பிடும் உற்சாகம். புத்தகம் படிக்கையில்மத்தாப்புச் சிதறலெனபிறந்திடும் சிந்தனைகள். ஐயத்தை எழுப்புகையில்மனவாசனைகளில்நிரம்பிடும் தெளிவு. சித்திரங்களில் ஆடிடும்நிறங்களின் கலவைக்குள்மயில்தோகையின் பரிமாணம். …
பேரன்பும் பெருங்கருணையும்ததும்பித்தளும்பிய காலக்கடலிலிருந்துபொங்கிப்பிரவாகித்துகரைதழுவ ஓடி வந்தன நினைவலைகள்நினைவுகளெனில் பாலைவனச்சோலையுமாம்நினைவுகளெனில்புன்னகையின் பின்னொளிந்த கோரப்பற்களுமாம் வாழ்வெனும் காட்டாற்றின் நடுவேசிறுதுண்டு நிலமாய்காலூன்றி ஆசுவாசம் கொள்ளவும்மலர்ந்திருக்கும் நினைவுகளில் கமழும்நறுமணத்தால் பேதலித்துகாலடி நிலம் நழுவவும்இளஞ்சூரியன் சிரிக்கும் இவ்வீதியில்அதோ அந்தக்குழந்தையின் நகைப்பொலியாய்ஓங்கியொலித்துஇறுதியில் முணுமுணுப்பாய்த் தேய்ந்தடங்கவும்என நங்கூரமிட்டுவரிசையாய் நிற்கின்றன நினைவுகள்அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்நட்சத்திரங்களைப்போல் …
வாழும் பல்லியும் மனைப்பாம்பும்அரங்கு வீட்டில் உலவும் தேள்களும்அசைத்துப்பார்த்ததில்லை பேத்தியைபெரிய தாத்தாவின் முழ நீளத்தாடிக்கும்மிலிட்டரி மாமாவின் கம்பீர மீசைக்கும்சற்றும் பயந்ததில்லை அவள் கண்ணைக்குத்துவதாய்ச்சொல்லப்படும் சாமியிடமும்தூக்கிச்சென்றுவிடுவதாய்நிறுத்தப்படும் பூச்சாண்டியிடமும்ராஜபார்ட்டுகளுக்குக் கோமாளிவேஷமிடுகிறார்களேயெனபரிதாபமேயுண்டு அவளுக்குதேனீக்குப் பயப்படாத மாமன்குளவிக்கு அஞ்சும் விந்தையும்முரட்டுக்காளையைத் தட்டி விலக்கும் செல்லாச்சிமருமகளிடம் காட்டும் பணிவும்என்றுமே புரிந்ததில்லை …
உறைபனி காலத்திற்கு முன்பிங்கேஇலையுதிர் காலத்திற்கு நன்றி!வேர்கள் சாகாமல் காத்திடும்இலைப் போர்வைகளுக்கு நன்றி! வசந்தம் வரை உறங்கிடும்தாவரங்களுக்குத் தளிரான நன்றி!நீள் துயில் கொள்ளும்வண்டுகளுக்கு வாஞ்சையான நன்றி! நவம்பரில் நல்விளைச்சல் தந்திட்டஉழவருக்கு முதல் நன்றி!உழவுக்கு ஊனாய் உழைத்திட்டவிலங்குகளுக்கு உளமார நன்றி! பாதம் தாங்கும் பூமிக்குநிலம் …
ஒட்டி இழையும் குஞ்சுகளையெல்லாம்எட்டித்துரத்தும் கோழியின் போக்குகொஞ்சமும் பிடிக்கவில்லை பேத்திக்குநல்லாச்சியிடம் வந்து அங்கலாய்க்கிறாள்‘பிள்ளேளுக்க தப்பை அம்மைதானே மன்னிக்கணும்அதுகளுக்கேது போக்கிடம்’ வெதும்பும் பேத்தியைதேற்றுகிறாள் நல்லாச்சி புன்னகையுடன்‘அட! கோட்டிப்பயபுள்ள.. குஞ்சுகளையெல்லாம்கோழி தவுத்துட்டுது’ என்கிறாள்‘தவிர்த்துவிட்டது’ எனத் தெளிவாயும் செப்புகிறாள்புரியாமல் தலைசொரியும் பேத்திக்குஇரைதேடல் முதல்இரையாகாமல் தப்புதல் ஈறாகப் பயிற்றுவித்தபின்குழந்தைகளைசுயமாய் …
சுரைக்குடம் கட்டிச் சில நாட்கள்காற்றடைத்த பையுடன் பலநாட்கள்கவிழ்த்த குடத்துடன் ஒன்றிரண்டு நாளேகடப்பாரை நீச்சலை மறந்துகெண்டை மீனாய் நீந்துகிறாள் பேத்திநீரில் தானுமொரு துளியாய்க்கலந்தவளுக்குநிலமென்பது நினைவிலேயே இல்லை ஆறும் குளமும் யோசிக்கின்றனஅடுத்த ஊருக்குப் போய்விடலாமெனதவளைகளெலாம் தப்பித்துவிட்டன எப்போதோ‘கலங்கியது தானே தெளியும்’அமைதிப்படுத்துகிறது மூத்த ஆறொன்று‘வாய்ப்பில்லை’ என்கிறது …
கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பிஅதற்குக் குளிராது வேட்டி போர்த்திசுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சிமுத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்சம்பாரம் பயணிக்கிறது அத்தோடுமுற்றத்து முருங்கை சாம்பார் உசத்தியாம்கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்நடவு வயல் வீரர்களை நோக்கிகுழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி …