காதலென்றால் என்னவென்று இங்கே பார்ப்போம்கதைபலவும் சொல்லிவந்தார் அதையும் கேட்போம்வாதமெனச் சொல்லிடுவர் ஆண்கள் எல்லாம்வண்ணமயில் பெண்ணழகால் வருமே என்றுபாதகமா ஒன்றுமிலை என்ன செய்யபாவையுடன் பழகிவிடின் எல்லாம் கூடும்சோதனைகள் வைத்துவிட்டே பெண்ணின் காதல்சொந்தமென அவளுளத்தில் முகிழ்க்கு மன்றோ*ஊனைத் துளைத்து உணர்வினில் புகுந்துதேனைக் குழைத்தே தந்துவிடும் …
கவிதை
பாகப்பிரிவினை வேண்டிசண்டித்தனம் பண்ணுகிறார் சின்னத்தாத்தாஎல்லாம் பகிர்ந்து முடித்தபின்தோட்டத்திலிருக்கும் மாமரத்திற்காகவந்து நிற்கிறது பஞ்சாயத்து அடிபெருத்த மாமரம் மரப்பலகைக்காகுமெனஅடிபோட்டுக்கொண்டிருக்கிறார் சின்னத்தாத்தாகாய்ப்பு முடிந்த முதியமரம்கட்டில்செய்ய ஆகுமென்பது அவர் வாதம்வாடாத பசுமரம் வாசமுள்ள பால்மரம்கிளை கழித்தால் தளிர்க்கும்முதிர்ந்தாலென்ன மூலையில் வாழட்டுமெனபெரியவர் கண்கசிகிறார்இராத்தூக்கமென்பது இனி இராதென்பதுபோல்கண்மூடிக் குமைகிறார் பேத்தியின் …
மெல்லமெல்ல அடியெடுத்துச் சென்றே பார்த்துமின்னலென மரமதனின் பின்னால் நின்றுசொல்லவொணா உணர்வுகளை அடக்கி மேலும்தீர்க்கமுடன் பார்வைகளை விட்டு அங்கேகல்லெனவே முகமிறுக்கிக் கண்கள் கூர்ந்தேகாணுகின்ற இரைதனையே குறியும் வைத்துபற்கடித்துப் பாய்கின்ற புலிக்கு யாரும்பயமுண்டு என்றெல்லாம் கூற மாட்டார்..*மிச்சமிலா எழிலெல்லாம் கொண்ட பெண்ணேமேதினியில் உனக்குபயம் உண்டோ …
திரிகாலம் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளஅந்த மாதத்திற்குக் குழப்பம் இருந்ததுஅதே குழப்பம்தான்அந்த நாளிற்கும் வந்ததுதன்னிலை திரிந்து மாறி நின்றனதொடக்கத்தில் கோடை மழையெனப்பெயர் வாங்கி அடித்து வாங்கிய மேமாத மழையும்நள்ளிரவுக் கோலமாய்க் கோடை மதியமும்தன்னிலைத் திரிந்து அப்போதைய நிலையின்வெளியீடாய் இருக்கக் கற்றுக்கொண்டன. பொருளுலகு …
பார்க்கும் எல்லாமுமாக வாழ்ந்துவிட ஆசைகுறைந்த ஆயுளில் நிறைந்த வாழ்வை விரும்பிகடைக்கோடி ஜீவி வரை வாழ்ந்திட ஆசைஎவ்வுயிராக ஏதாக எனும் குழப்பத்தில்பச்சோந்தியாக எனில்பாவம் உயிர்வாழ நிறம்மாறும் அதற்கும்மனிதர்களால் அவப்பெயர்நாயாக எனில்உண்மையிலேயே அதன் வாழ்வு‘நாய் படும் பாடாக’ உள்ளதுமழையாக எனில்அனைவரும் வேண்டும் மழையாகவாவெறுக்கும் மழையாகவாமரமாக …
உங்கள் வாழ்க்கை உங்களுடையதே-இருண்ட அடிமைத்தனத்திற்குள்அதை நசுங்க விடாதீர்கள். விழிப்புடன் இருங்கள்.வெளியேற வழிகள் உள்ளன.எங்கோ ஒரு ஒளி உள்ளது.அது பெரிய வெளிச்சமாக இல்லாதிருக்கலாம்.ஆயினும் அதுஇருளை வென்று கொண்டேயிருக்கும். விழிப்புடன் இருங்கள்.தெய்வங்கள்உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவார்கள்.அவற்றை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மரணத்தை உங்களால் …
பெரியதாத்தா வரும் தினங்களில்இறக்கை கட்டிக் குதூகலிப்பாள் பேத்திவயலில் விளைந்தவையென கொண்டுவரும் மூட்டைக்குள்தோட்டத்தில் உதிர்ந்தவையெனஒன்றிரண்டு மயிற்பீலிகளும் இருப்பதுவும்ஒரு காரணம் ஆடலும்பாடலும் கதைசொல்லலுமாய்தாத்தாவின் தோளில் நிழலாய்த்தொற்றிநல்லாச்சியை மறந்து திரியும் பேத்திக்குஒரேயொரு குறைதான்தன் களித்தோழனிடம்கைவிரலிடுக்கில் புகையும் கடைசி விரல்தான் அதுஆருரைத்தும் கேட்காத அகந்தையைஅறிவுறுத்தி உடைக்க எண்ணுகிறாள் …
1.எங்கும் வெயில்வெப்பச் சாலைகளில் நிசப்தம்நீளும் மதியம். 2.சுருங்கி மறையும் நிழல்கள்தலைக்கு மேல் நண்பகல்கனக்கும் அமைதி. 3.சுழலும் மின்விசிறிசோம்பல் முறிக்கும் வட்டங்கள்கரைகிறது நேரம். 4.பொன்னாக மாம்பழங்கள்பிசுபிசுக்கும் கைகள்ஒளியாக வழிகிறது இனிப்பு. 5.சூடான நிலம்வெற்றுப் பாதங்கள்ஓடுகிறது குழந்தைமை. 6.நெற்றியில் வியர்வைஉப்பு வெயிலின் சந்திப்புஉடலோடு ஒட்டும் …
1.பெண் எனும் பேனாஇறுகப் பிடித்திருந்தமுள் பேனாவின் முனையிலிருந்துவழியும் ரத்தத்துளிகள் மையாக மாறதனது வாழ்க்கைப் புத்தகத்தின்அத்தனை பக்கங்களிலும் எழுதுகிறாள்தனக்குப் பிடித்தமான வாழ்க்கையை. 2.காதல் பூக்கள்மொட்டாக முகையாக இருக்கும் போதேஅவசரம் கொள்ளாதீர்கள்.வீயாகிச் செம்மையாகும் வரையிலும்காத்திருக்கத் தேவையில்லை.அலராக மலராக இருக்கும்போதுபறித்துக்கொள்ளுங்கள்;கைகளுக்கு மட்டும் அல்லமனதிற்கும் அதனால் அழகு …
சிக்கனமென்பது கிஞ்சித்துமில்லாமூத்தவனால் பெருங்கவலை நல்லாச்சிக்குகாசுபணமெல்லாம் தண்ணீர் பட்டபாடு அவனுக்குதண்ணீரையும் அவ்வாறே வாரியிறைப்பான்பிறரைப்பற்றிக் கவலை கொள்ளா அப்பெருஞ்செலவாளிநாளையைப் பற்றிச் சற்றும் எண்ணாதவனைஎண்ணியெண்ணி நாளும் உருகுகிறாள்‘எங்காலத்துக்குப் பொறவு என்ன கதியோ?!’ என மருகுகிறாள்பிள்ளையின்மேல் படியும் ஏளனப்பார்வைகளைசகியாத நல்லாச்சிபெரியப்பனுக்குப் பரிகிறாள் பேத்தி தாகங்கொண்ட வெய்யோன் அருந்தியதால்கோழிக்காலாய் …