எல்லா நாட்களையும் போலவே அன்றும் அஸ்ஸாமின் முன்மாலைப் பொழுதொன்றில் பள்ளி விட்டு வீடு நோக்கிக் குதூகலமாகத் திரும்பிக் கொண்டிருக்கையில் தன்மத்ராவுக்குத் தெரியாது நாளை முதல் பள்ளிக்குச் செல்கையில் டாட்டா காட்டி வழியனுப்பி வைக்கத் தனது அன்பான அம்மா உயிருடன் இருக்கப் போவதில்லை …
இலக்கியம்
கிளை நுனியில் ஊசலாடும்தூக்கணாங்குருவியின் பெருவீடு கண்டுவியப்புடன் வினவினாள் பேத்தி“கம்பியும் இல்லை, காரையும் இல்லை,எப்படி முடைந்தது இத்தகு பேரழகை?பட்டம் பயின்ற பொறியாளராலும்இப்படியோர் விந்தை இயலுமோ ?” மென்னகை புரிந்த நல்லாச்சிஇயற்கையின் அதிசயங்களில்இதுவுமொன்று என்றாள்;கூட்டுக்குள் மழைத்தூறல் நனைக்குமேஇரவானால் வெளிச்சத்திற்கு என்செய்யும்அசராமல் கேள்விகளை அடுக்குகிறாள் பேத்தி …
காலத்தின் கால்களில் நசுங்கவேண்டுமென்றவிதிமுறைகளின் சாம்பல்நிறப் புத்தகத்தைவாசித்தறியா பூக்கள்ஒவ்வொன்றாய் கண்மலர்த்துகின்றன காற்றின் கத்தரிக்கோலால்உலர்ந்த சருகுகளாய் நறுக்கப்பட்டுமண்ணின் ஆழத்தில் புதையப்போகும்மரணத்தின் கணக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டுதங்கள் பூங்கதவுகளைத் திறக்கின்றன யாரோ வரைந்த ஓவியத்திலிருந்துதிடீரென வெளியேறும் வண்ணத்துப் பூச்சிகளாய்உலகைப் பார்க்கும்அவற்றின் பார்வையில்வானம் ஒரு நீலநிற நதியாகவும்,பூமி அதில் …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். அந்நிலவும் அஞ்சும் அழகு என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கன்னல் மொழியாளின் கார்வண்ணக் …
சுள்ளி சேகரிக்கும் பறவை கூட்டைக் கலைக்கும் காற்று மற்றுமொரு சுள்ளி.
சமயோசிதம் (Presence of mind) எனப்படும் மதிக்கூர்மை தக்க நேரத்தில் வெளிப்படுவது கவிஞர்/புலவர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று. அவர்களின் அம்பறாத்தூணியிலிருந்து சொற்கள் அம்புகளைப் போன்று எடுக்க எடுக்க வந்துகொண்டே இருக்கும். எந்தச் சூழலையும் வெல்லத் தெரிந்த சொலல்வல்லோர் ஆவாரவர். சான்றாக, எட்டயபுரம் அரசவையில் …
ஒரு கவிஞருக்கு, ஒரு கஜல், ஒரு புகழ்பெற்ற கஜல் பாடகரால் பாடப்பட்டால் அது நிலைத்த புகழுக்குப் போதுமானதாக இருக்கிறது. அந்த ஒற்றை கஜல் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்திய பாகிஸ்தானிய இசைத்தட்டு உலகில் கஜல்கள் புகழடையத் தொடங்கிய எழுபதுகளின் …
செல்வத்தின் செங்கதவு – பாப் எல் மண்டெப் நீரிணை பகுதி – 1 கி.மு. 1500 அந்த அதிகாலையில் செங்கடலின் நீர் அமைதியாக இருந்தது. ஆனால், அந்த அமைதியின் அடியில் உலக வரலாற்றையே மாற்றப்போகும் ஒரு ரகசியம் ஓடிக்கொண்டிருந்தது. இன்று நாம் …
ஏதென்ஸ்: உலகின் முதல் அறிவுத் தலைநகரம் “எங்கள் நகரம் கிரேக்கத்தின் கல்விக்கூடமாகும்.” முன்னுரை மனித வரலாற்றில் சில நகரங்கள் வாளால் பேரரசுகளை உருவாக்கின. சில நகரங்கள் வணிகத்தால் செல்வத்தைப் பெற்றன. ஆனால், மிகச் சில நகரங்களே சிந்தனையால் உலகத்தை வென்றன. கிமு …
மலையை ஏறியது கால்கள் அல்ல… குடும்பத்தின் அன்பு! வாழ்க்கை ஒரு நதியைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறது… இல்லை, நாம்தான் அதை நோக்கி வெறித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்! காலையில் விழித்த கணமே வேலை, மெசேஜ்கள், செய்திகள், பொறுப்புகள், கடமைகள் என்று ஆளுக்கொரு திசையில் ஓடித் …