திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 22

This entry is part 27 of 27 in the series திருவை மு.இரா. கவிதைகள்

உன் நினைவில்

ஆரஞ்சு வண்ணப் பொட்டிட்டுக்கொண்டு
கதிர்க் கூந்தலைத் திருத்திக்கொண்டு
விடியற்காலை வேளையில்
அலங்கரித்த வானாய்த் தெரிவாய்

கருமேகம் மூடிக்கொண்ட
மத்தியான நேரத்தில்
வெறுமையில் நடக்கிறபோது
கடலாக மாறி
அலை உதடுகளால் முத்தாடி வினாவுவாய்

அந்திம வேளையில்
சமூகமே தனிமையைத்
தாங்கிக்கொண்டிருக்கும்போது
தன்னந்தனி எனக்குள்
பலவித பாவங்களின்
சமுத்திரமாய்ச் சம்பாசனை செய்வாய்

கனவாய் வருவாயென்று
நினைத்த இராத்திரி
தூக்கத்தைத் துரத்திவிட்டு
இமைகளில் சாய்ந்து
இரண்டாம் ஜாமத்தின் இறுதியில்
பழம் நினைவுகளை வருடிக்கொண்டு
அருவியைப் பொழிவாய்.

திருவை மு.இரா. கவிதைகள்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 21

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Related posts

அசுரவதம் – பாகம் 4: அத்தியாயம் 2: மயில் இராவணன்

மருத்துவர் பக்கம் – 49: காணொளி விளையாட்டுகளின் ஆபத்தான பக்கம்.

கிறித்துவம் – புதியன புகுதலும் பழையன கழிதலும் பகுதி 1: அத்தியாயம் 7 & 8