- திருவை மு.இரா. கவிதைகள் -1
- திருவை மு.இரா. கவிதைகள் -2
- திருவை மு.இரா. கவிதைகள் -3
- திருவை மு.இரா. கவிதைகள் – 4
- திருவை மு.இரா. கவிதைகள் – 5
- திருவை மு.இரா. கவிதைகள் – 6
- திருவை மு.இரா. கவிதைகள் – 7
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 2
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 3
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 4
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 5
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 6
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 7
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 8
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 9
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 10
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 11
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 12
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 13
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 15
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா
பொய்யே வெளிப்படாத சர்வாதிகாரி
பொய்யையே
பலமுறை சொல்லி
பத்துமுறைக் காட்டி
அதையே நிஜமென வஞ்சிக்கிறது காலம்.
உண்மையைத் தூக்கிலிட்டு
பொய்யை ஊர்வலமாக நடத்தும்
காலத்தைப் பார்த்து நடுங்குகிறது சமூக ஒழுங்கு.
பாலியச் சிநேகிதங்களை ஐம்பது துண்டுகளாக நறுக்கி
பாசிசக் கழுகுகளுக்கு இரையாக வீசுகிறது இராஜ்ஜியம்.
கபடமறியாத நட்புகளின் கழுத்தில்
சுயநலக் கரைத்துண்டுகளை இறுக்கிக் கட்டி
இராஜ்ஜியத்தின் நடுமத்தியில் தொங்கவிடுகிறது அதிகாரம்.
மறைவு எங்கே இருக்கிறது
இப்போதெல்லாம் பகிரங்கம்தான்
தட்டில் ஒரு நான்கு வாய் உணவைப் பகிர்ந்து உண்டாலும் பாவமே
கபடமறியாத சொந்தங்கள் சேர்ந்து நடந்தாலும் குற்றமே
பொய்யின் தலைமேல் உட்கார்ந்து ஊர்வலம் போகிறீர்களா
பொய்யைத் தலைமேலேற்றிக்கொண்டு ஊர்வலம் போகிறீர்களா
எது என்னவானால் என்ன!
இப்போது “பொய்யே வெளிப்படாத சர்வாதிகாரி”
வாழ்க்கையை “ஏதும் மாற்ற முடியாத” அவர்களே
மனிதர்களை “ஏமாற்றுகின்றனர்”
மாறாத வாழ்க்கையை மறந்த மனிதர்கள்
மதவெறியேறி வீதிகளில் தள்ளாடுகிறார்கள்.
அவர்கள் வாய்ச்சவடால் விடுகிறார்கள்
இவர்கள் வெறியாட்டமிடுகின்றனர்.
மனிதர்களை மண்ணிலிட்டு மூடுவதைப் போல
மனதைப் பிளந்து நெருப்பிடுவதும் ஒரு கலையே
சரியாகப் பார் —
அந்தக் கலையில் மிகு தேர்ச்சி பெற்றவர்களே
இராஜ்ஜியத்தை ஆளுகின்றனர்.