- திருவை மு.இரா. கவிதைகள் -1
- திருவை மு.இரா. கவிதைகள் -2
- திருவை மு.இரா. கவிதைகள் -3
- திருவை மு.இரா. கவிதைகள் – 4
- திருவை மு.இரா. கவிதைகள் – 5
- திருவை மு.இரா. கவிதைகள் – 6
- திருவை மு.இரா. கவிதைகள் – 7
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 2
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 3
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 4
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 5
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 6
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 7
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 8
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 9
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 10
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 11
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 12
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 13
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 15
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 16
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 17
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 18
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 19
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 20
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 21
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா
என்னோடு வருவாயா
இலைகளுக்கிருக்கிற நிறத்தை எனக்கும்
இளஞ்சூரியனின் வர்ணத்தை உனக்கும்
பலவந்தமாகத் திணிக்கப்படாத நாளில்
குணத்திரு பூக்களாகித் தோட்டத்தில் மலர்ந்தோம்
விஷம் நுழையாத ஊர்ச் சாலைகளில்
பால்யத்தை சைக்கிள் டயர் போல் உருட்டிக்கொண்டு
எந்த அந்தியிலோ திண்ணைகளில் கூடி
சாயந்திரங்களுக்குச்
சிரிப்புத் தோரணத்தைத் தொங்கவிட்டோம்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே
சேர்ந்திருந்தால் பொறுக்காத காலம் வந்தது
கலந்து தின்றால் சகிக்க முடியாத காலம் வந்தது
சேர்ந்து சிரிப்பதை நடப்பதை
அனுமதிக்காத காலம் வந்தது
சாஷ்டாங்கமாய் நீயும்
சஜ்தாவாய் நானும்
இருவரும் உறவாடியது இந்த மண்ணில்தான் இல்லையா?
கோபுரத்தின் மேல் அமரும் புறாவாகவும்
மசூதியின் மேல் அமரும் கபூதராகவும்
அழைக்கப்படும் நாம் இருவரும் ஏங்கியது சாந்திக்காகத்தானே
அப்புறம் இப்போது
உகாதி பச்சடியாய் என் வீட்டை அடையாத அன்பும்
ஈத் சேமியாவாக உன் வாசல் மிதிக்காத என் நட்பும்
குப்புறப்போட்ட கிண்ணங்களாக அடுப்பறையில்
புலம்புகின்றனவே ஏன்?
உனக்குத் தெரிந்த மந்திரங்களை நீ ஓதிக்கொண்டு
எனக்கு நினைவிருக்கிற
சூராக்களை திலாவத் செய்துகொண்டு
காப்போ தாயத்தோ கட்டிக்கொண்டால் மட்டும்
தேசத்திற்குப் பிடித்துக்கொண்ட
மதநோய் குணமாகிவிடுமா?
உன்னையும் என்னையும்
ஆட்டத்தின் நடுவில் நிறுத்தி
நம்மைச் சுற்றி நாற்காலிகளைக் குவிக்கிறார்கள்
தீ போதவில்லையென்று
பொங்கியெழும் நெருப்பில்
பசும்புல்லைப் பரப்புகிறார்கள்
தீ மூட்டியவன் கையில் நெய்யாகி விடாதே
நீராய் மாறித் தீயை அணைப்போம்
என்னோடு வருவாயா.